பஜாஜ் ஆட்டோ மற்றும் ட்ரையம்ப் கூட்டணியில் உருவான ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 X பைக்குகளில் அடுத்ததாக ஸ்கிராம்பர் 400 எக்ஸ் விலை அடுத்த சில வாரங்களுக்குள் அறிவிக்கப்பட உள்ளது. விற்பனையில் உள்ள ஸ்பீடு 400 மாடலை விட சற்று விலை கூடுதலாக அமையும் என்பதனால் ரூ. 2.45 லட்சத்திற்குள் அமையலாம்.
அறிமுக சலுகையாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் விலை குறைவாக ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் விற்பனைக்கு கிடைக்கலாம்.
Triumph Scrambler 400 X
ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 X பைக்கில் புதிய TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
ஆஃப் ரோடு மற்றும் ஆன்-ரோடு பயன்பாடுகளுக்கு ஏற்ற டயர் வழங்கப்பட்டுள்ள ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கின் சஸ்பென்ஷன் அமைப்பு, பிரேக்கிங் இரு மாடல்களுக்கும் வித்தியாசப்படுகின்றது.
ட்ரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 X பைக்கில் ஃப்யூஷன் ஒயிட் நிறத்துடன் மேட் காக்கி கிரீன், கார்னிவல் ரெட் உடன் பாண்டம் பிளாக் மற்றும் பாண்டம் பிளாக் வித் சில்வர் ஐஸ் என மூன்று வண்ணத்தில் கிடைக்கின்றது.
மேலும் படிங்க – ஸ்பீட் 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் வித்தியாசங்கள்
ஸ்பீடு 400 அறிமுகம் முதலே முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், விலை அடுத்த சில நாட்களுக்குள் அறிவிக்கப்பட்ட உடன் டெலிவரி துவங்கப்பட உள்ளது.