இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளரான டிவிஎஸ் மோட்டார் தனது பிரசத்தி பெற்ற அப்பாச்சி பைக் உற்பத்தி எண்ணிக்கையை 40 இலட்சம் இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அப்பாச்சி பைக்கில் தற்போது RTR 160, RTR 160 4V, RTR 180, RTR 200 4V மற்றும் RR 310 போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 4 மில்லியன் வாகனத்தை டிவிஎஸ் மைசூர் ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவனம் 957 அடி நீளம் மற்றும் 57 அடி உயரம் பெற்ற ரேசிங் செக்கர்டு கொடியை தனது 2000 வாடிக்கையாளர்களின் புகைப்படத்தை கொண்டு வடிவமைத்துள்ளது. இந்த கொடி ஆசிய சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
For the latest Tamil auto news and Bike reviews, follow automobiletamilan.com on Twitter, Facebook, and subscribe to our YouTube channel.