ஒகினாவா க்ரூஸர் மேக்ஸி மின்சார ஸ்கூட்டர் டீசர் வெளியானது

0

okinawa cruiser teased

இந்தியாவின் முன்னணி மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பாளரின் ஒகினாவா ஆட்டோடெக் தனது மேக்ஸி ஸ்டைல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரினை க்ரூஸர் என்ற பெயரில் டீசர் செய்துள்ளது. இந்த கான்செப்ட் மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வரவுள்ளது.

Google News

முன்பாக இந்நிறுவனம், ஒகினாவா ஒகி-100 மின்சார பைக் என்ற கான்செப்ட்டை 2018 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தி நிலையில் தற்போது, இந்த மாடல் உற்பத்தி நிலை மாடலாக அடுத்த சில வாரங்களில் நடைபெற உள்ள 15வது எக்ஸ்போவில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. இந்த பைக் 150 கிமீ ரேஞ்சு மற்றும் டாப் ஸ்பீடு 100-120 கிமீ பெற்றிருக்கும்.

தற்போது இந்நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் டீசரில் க்ரூஸர் என்ற பெயரில் டீசர் வெளியிட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்டைல் தற்போது விற்பனைக்கு கிடைத்து வருகின்ற சுசுகி நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 போன்ற மேக்ஸி ஸ்டைலை பெற்றிருக்கின்றது. மேலும் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

இந்நிறுவனம் தற்போது விற்பனை செய்து வருகின்ற ஐ பிரைஸ் ஸ்கூட்டருக்கு இணையான ரேஞ்சு 150-160 கிமீ ஆகவும், வேகம் அதிகபட்சமாக மணிக்கு 100-120 கிமீ ஆக இருக்கலாம். மேலும் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றிருக்கும்.

மேலும், ஒகினாவா க்ரூஸர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.