ஆட்டோ எக்ஸ்போ 2018 : டொயோட்டா யாரிஸ் கார் டீசர் வெளியீடு

0

toyota yaris compact sedan teasedவருகின்ற பிப்ரவரி 9ந் தேதி முதல் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சியில் டொயோட்டா யாரிஸ் செடான் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளதை தொடர்ந்து விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

டொயோட்டா யாரிஸ்

toyota yaris compact sedan

Google News

இந்தியா சந்தையில் டொயோட்டா வயோஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் எனும் எதிர்பார்க்கப்பட்ட செடான் ரக மாடல், தற்போது டொயோட்டா யாரிஸ் என்ற பெயரில் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது.

டொயோட்டா இந்தியா வெளியிட்டுள்ள டீசரில் யாரிஸ் காரின் அடிப்பையிலான டீசரை வெளியிட்டுள்ள நிலையில், வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள யாரிஸ் இந்த வருடத்தின் மத்தியில் முதற்கட்டமாக பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் எஞ்சின் கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரில் மேனுவல் கியர்பாக்ஸ் தவிர சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலும் இடம்பெற உள்ளது.

வரும் காலத்தில் பெட்ரோல், டீசல் தவிர பிளக் இன் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் காராகவும் இந்த மாடல் வெளியிடப்பட வாய்ப்புள்ள நிலையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மற்றும் மாருதி சியாஸ் ஆகிய மாடல்களுக்கு எதிராக நிலை நிறுத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க ; Auto Expo 2018 News & Updates in Tamil

toyota yaris rear