புதிய தலைமுறை சாங்யாங் G4 ரெக்ஸ்டான் எஸ்யூவி மாடல் சியோல் மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திராவின் புதிய பிரிமியம் எஸ்யூவி மாடல் ரெக்ஸ்டான் மாடலை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். ரெக்ஸ்டான் எஸ்யூவி தென்கொரியாவில் நடைபெறுகின்ற சியோல் மோட்டார் ஷோ அரங்கில் புதிய ரெக்ஸ்டான் அறிமுகம் மஹிந்திரா எக்ஸ்யூவி700 மாடல் இதன் அடிப்படையிலே அமைந்திருக்கும். ஃபார்ச்சூனர், எண்டேவர், போன்ற மாடல்களுக்கு சவாலாக விளங்கும். தென்கொரியா சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய ரெக்ஸ்டான் எஸ்யூவி மாடலில் சர்வதேச அளவில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. ஆனால் இந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட புதிய ரெக்ஸ்டான் விற்பனைக்கு வராது என மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது. புதிதாக சாங்யாங் பிராண்டு லோகோ மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் LIV-2 கான்செப்ட் மாடலின் வடிவ தாத்பரியங்களின் முக்கிய அம்சங்களை பெற்றுள்ள புதிய ரெக்ஸ்டான் மாடலில் முன், பின்பக்க பம்பர் புதுப்பிக்கப்பட்டிருப்பதுடன் , புதிய அலாய் வீல் , பாடி வண்ண கிளாடிங் போன்றவற்றில் பல…
Author: MR.Durai
டாடா டீகோர் செடான் கார் ரூ.4.70 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டீகோர் கார் மிக நேர்த்தியான ஸ்டைலிசான ஸ்டைல்பேக் பூட்டினை பெற்று விளங்குகின்றது. டாடா டீகோர் ரூ.4.70 லட்சம் விலையில் பெட்ரோல் எஞ்சின் பெற்று டீகோர் மாடல் தொடங்குகின்றது. ஸ்டைல்பேக் என அழைக்கப்படுகின்ற மிக நேர்த்தியான கூபே ரக கார்களை போன்ற பூட்டினை பெற்றுள்ளது. டியாகோ ஹேட்ச்பேக் மாடலை அடிப்படையாக கொண்டதே டீகோர் செடான் மாடலாகும். டிசைன் டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்ட டாடா டிகோர் கார் மாடலானது ஹேட்ச்பேக் ரக டியாகோ காரினை அடிப்படையான செடான் ரக கார் மாடலாகும். மிக நேரத்தியான தேன் கூடு போன்ற வடிவமைப்பினை தருகின்ற கிரிலுக்கு மத்தியில் அமைந்துள்ள டாடா லோகா சிறப்பான முகப்பு தோற்றத்தை கொடுப்பதுடன் புராஜெக்டர் லென்ஸ் கொண்ட முகப்பு விளக்கினை பெற்றுள்ளது. பக்கவாட்டில் டியாகோ போன்ற அமைப்புடன் அமைந்துள்ள பெட்ரோல் மாடலில் 15 அங்குல அலாய்…
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ நிறுவனத்தை ஸ்கூட்டர் விற்பனையில் பின்னுக்கு தள்ளி டிவிஎஸ் மோட்டார்ஸ் இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது. ஸ்கூட்டர் விற்பனை 2016-2017 ஸ்கூட்டர் விற்பனையில் ஹீரோ நிறுவனத்தை டிவிஎஸ் பின்னுக்கு தள்ளியுள்ளது. ஹீரோ நிறுவனம் ஸ்கூட்டர் விற்பனையில் 1.64 சதவீத வீழ்ச்சியை பெற்றுள்ளது. யமஹா நிறுவனம் மற்ற நிறுவனங்களை காட்டிலும் 37 சதவீத கூடுதல் வளர்ச்சியை பெற்றுள்ளது. ஹோண்டா நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் வலுவான பங்களிப்பினை பெற்று விளங்குகின்ற நிலையில் போட்டியாளர்களான டிவிஎஸ் ,ஹீரோ,யமஹா போன்ற நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்தே வருகின்றது. சியாம் வெளியிட்டுள்ள ஸ்கூட்டர் விற்பனை நிலவர அறிக்கையின் படி கடந்த ஏப்ரல் 2016 முதல் பிப்ரவரி 2017 வரையிலான காலகட்டத்தின் விற்பனை அட்டவனை கீழே இணைக்கப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்கூட்டரின் துனையினால் முதலிடத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ளது. அதனை தொடர்ந்து டிவிஎஸ் மோட்டார்ஸ் உள்ளது. மற்ற நிறுவனங்களை காட்டிலும் யமஹா நிறுவனம் 37.34…
ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் 22 புதிய வசதிகளுடன் 2017 நிஸான் டெரானோ எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏபிஎஸ் உடன் இபிடி மற்றும் இஎஸ்பி நிரந்தர அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது. 2017 நிஸான் டெரானோ 22 புதிய வசதிகளுடன் நிஸான் டெரானோ எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏபிஎஸ் உடன் இபிடி மற்றும் இஎஸ்பி போன்ற அம்சங்கள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. 7 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய டெரானோ எஸ்யூவி மாடலின் தோற்ற அமைப்பின் முகப்பில் சிறிய அளவிலான கிரில் மாற்றங்கள் , புதுப்பிக்கப்பட்ட பம்பர் , க்ரோம் பூச்சு கொண்ட பனிவிளக்கு அறை போன்றவற்றுடன் எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ளது. இன்டிரியர் அமைப்பில் பல புதிய வசதிகள் இடம்பெற்றுள்ளது, அவற்றில் முக்கியமானவை புதிய 7 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடிய நேவிகேஷன் மற்றும் குரல் வழி கட்டளை ஏற்கும் வசதி , க்ரூஸ் கன்ட்ரோல் ,ஹில் கிளைம்ப் அசிஸ்ட்…
இன்று விற்பனைக்கு வரவுள்ள 2017 நிஸான் டெரானோ எஸ்யூவி மாடலில் இடம்பெற உள்ள புதிய வசதிகளின் விபரம் இணையத்தில் கசிந்துள்ளது. 2017 நிஸான் டெரானோ புதிய டெரானோ எஸ்யூவி மாடலில் தோற்றம் மற்றும் கூடுதல் வசதிகளை மட்டுமே பெற்றிருக்கும். என்ஜின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. டஸ்ட்டர் , க்ரெட்டா .பிரெஸ்ஸா ,டியூவி300, ஈக்கோஸ்போர்ட் போன்ற எஸ்யூவிகளுடன் போட்டியிடுகின்றது. XLP, XED, XLD (O), XVD Pre மற்றும் XVD Pre AMT என மொத்தம் 5 விதமான வேரியன்டுகளில் வரவுள்ள 2017 நிஸான் டெரானோ மாடலில் புதிய வசதியாக ஃபேபரிக் இருக்கை , அப்ஹோல்ஸ்ட்ரி, புதிய டோர் டிசைன் , க்ரூஸ் கன்ட்ரோல் , நேவிகேஷன் உள்பட பல புதிய வசதிகளுடன் கூடுதலாக புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். என்ஜின் ஆற்றலில் எந்த மாற்றங்களும் இல்லாமல் விற்பனையில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் இருவிதமான…
பாரத் ஸ்டேஜ் 4 மாசு கட்டுப்பாடு என்ஜினுடன் கூடுதலாக இரண்டு புதிய நிறங்களில் ரூ. 58,351 விலையில் 2017 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2017 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் ரூ. 58,351 சென்னை ஆன்-ரோடு விலையில் புதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டர் அறிமுகம். புதிதாக ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள பாரத் ஸ்டேஜ் 4 மாசு கட்டுப்பாடு நடைமுறைக்கு ஏற்ப அனைத்து தயாரிப்பாளர்களும் தங்கள் வாகனத்தை அறிமுகம் செய்து வருகின்றனர். மேலும் இருளான இடங்களில் தானாகவே ஒளிரும் வகையிலான ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் வசதியும் அடிப்படையாகவே சேர்க்கப்பட்டுள்ளது. முந்தைய என்ஜின் ஆப்ஷனிலே பாரத் ஸ்டேஜ் 4 இணைக்கப்பட்டு 8 HP @ 7000 RPM ஆற்றலுடன் 8.91 Nm @ 5500 RPM வெளிப்படுத்தும் 109.19cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆற்றலை சக்கரத்துக்கு…