2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி மாடல் குறித்தான முதல் வரைகலை படத்தை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சீன சந்தையில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட ஐஎக்ஸ்25 தோற்ற உந்துதலை பின்னணியாக கொண்ட புதிய கிரெட்டா காரில் பல்வேறு கனெகெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகள் இடம்பெற உள்ளது. நடுத்தர சந்தையில் விற்பனைக்கு வெளியிட்ட நாள் முதல் அமோகமான வரவேற்பினை பெற்றுள்ள இந்த எஸ்யூவி காரின் மிக கடுமையான போட்டியை கியா செல்டோஸ் ஏற்படுத்த துவங்கியுள்ளது.
செல்டோஸில் பயன்படுத்தப்பட்டு வரும் என்ஜினை பகிர்ந்து கொள்ள கிரெட்டா 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசலுக்கு மாற்றாக புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பெற்றிருக்கும். அடுத்தப்படியாக கூடுதலாக 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிப்ரவரி 6 ஆம் தேதி ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியில் முதன்முறையாக இந்திய சந்தைக்கு புதிய ஹூண்டாய் கிரெட்டா காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து மார்ச் மாத மத்தியில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.