ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம், இந்தியாவில் இரண்டு மின்சார சைக்கிள் மற்றும் பெர்ஃபாமென்ஸ் ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த உள்ளது.
ஹீரோ எலெக்ட்ரிக் AXL-HE20
இந்தியாவில் முதன்முறையாக மடக்கும் வகையிலான இரண்டு மின் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ள ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம், அவற்றை தொடர்ந்து அதிகபட்சமாக மணிக்கு 85 கிமீ வேகத்தில் செல்லும் திறன் பெற்ற AXL-HE20 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் மாடலை வெளியிட்டுள்ளது.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற உள்ள 4,000 வாட் லித்தியம் ஐயன் பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற இந்த ஸ்கூட்டரில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் நுட்பம் இடம்பெற்றுள்ளதால் அதிகபட்சமாக 110 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டமாக விளங்குவதுடன் , முழு சார்ஜ் ஏறுவதற்கு சராசரியாக 4 மணி நேரங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிமீ ஆகும்.
இந்த ஸ்கூட்டரில் கீ-லெஸ் என்ட்ரி, ஜிபிஎஸ் டிராக்கிங் உட்பட ஸ்மார்ட்போன்களை இணைக்கும் ஆதரவுடன் , சர்வீஸ் தொடர்பான விபரங்களை வாடிக்கையாளர்கள் மற்றும் டீலர்கள் பெறும் வகையிலான நுட்பங்களை பெற்றிருக்கும்.
இங்கிலாந்தின் A2B என்ற நிறுவனத்தின் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள இரு இ-சைக்கிள்கள் மடக்கும் வகையிலான மாடல்களாக அமைந்துள்ளது. A2B ஸ்பீட் என்ற மின்சார சைக்கிளில் 500 வாட் மோட்டாருடன் 36 வோல்ட் பேட்டரி 700 முழுமையான சார்ஜ் சைக்கிளை கொண்டிருப்பதுடன், அதிகபட்சமாக மணிக்கு 45 கிமீ வேகத்தில், முழுமையாக 70 கிமீ தொலைவு வரை பயணிக்க இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சைக்கிளில் 8 கியர்களை கொண்ட Shimano XT டிரான்ஸ்மிஷனுடன் ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.
மற்றொரு இ-சைக்கிள் மாடலான A2B கூ பூஸ்ட் என்ற மின்சார சைக்கிளில் 350 வாட் மோட்டாருடன் லித்தியம் ஏயன் பேட்டரி 700 முழுமையான சார்ஜ் சைக்கிளை கொண்டிருப்பதுடன், அதிகபட்சமாக மணிக்கு 32 கிமீ வேகத்தில், முழுமையாக 60 கிமீ தொலைவு வரை பயணிக்க இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சைக்கிளில் 8 கியர்களை கொண்ட Shimano derailleur டிரான்ஸ்மிஷனுடன் ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ள மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது குறித்து அதிகார்வப்பூர்வ விபரங்கள் வெளியிடப்படவில்லை.
மேலும் படிக்க ; Auto Expo 2018 News & Updates in Tamil