மான்ஸ்டர் 1200R பைக்கில் 160பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1200சிசி டெஸ்டாஸ்ரெட்டா வி டிவீன் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 131என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது
மான்ஸ்டர் 1200ஆர் பைக் ரேஸ் டிராக் மட்டுமல்லாமல் நகர வீதிகளிலும் இட்டு வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மிக சிறப்பான ரைடிங் அனுபவத்தினை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மான்ஸ்டர் 1200ஆர் பைக்கில் பெரும்பாலான பாகங்கள் கார்பன் ஃபைபரால் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதன் எடை மொத்தம் 180கிலோ மட்டுமே.
எலக்ட்ரானிக் அமைப்புடன் ஏபிஎஸ் மற்றும் 8 விதமான டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளது. மேலும் மான்ஸ்ட்ர் 1200R பைக்கில் மூன்று விதமான மோட் ஆப்ஷனை பெற்றுள்ளது. அவை ஸ்போர்ட் , டூரிங் மற்றும் அர்பன் ஆகும்.
டுகாட்டி மான்ஸ்டர் 1200R பைக் இரண்டு விதமான வண்ணங்களில் கிடைக்கும். அவை சிவப்பு மற்றும் கருப்பு வண்ணத்தில் கிடைக்கும். இந்திய சந்தையில் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் வரவுள்ளது.
Ducati Monster 1200 R Unveiled